இங்கிருந்து அடுத்து எங்கு செல்வது?

இச்சமுதாயத்துடன் சேர்ந்து வேலை செய்திட, இந்த ஆய்வில் மேலும் பல வளர்ச்சிகளை உருவாக்கிட, ஆய்வு முறைகளைத் தேவைக்கேற்றபடி உருமாற்றிட, இவ்வுரையாடலை முதன்மை ஆய்வாளருடன் தொடர்ந்திட கூட்டுபணியாளர்களை நாங்கள் அழைக்கிறோம்.
எதிர்காலத்தில், இத்திட்டம் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்யத் தூண்டுமெனவும், குழு செயற்பாங்கிற்கு ஊக்கமூட்டும் எனவும் நிலைபேறும் சமத்துவமின்மையை எதிர்க்கொள்ளும் கொள்கைகள் மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் மனத்திடத்தையும் கற்பனையயும் சிந்தித்துப் பார்க்கும்படி வலியுருத்தும் எனவும் நம்புகிறோம். இவ்விளைவுகள் இந்த ஆய்வின் இறுதிக் கூற்றுகளாக எண்ணிடாமல், இந்த முயற்சியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்ல விடுக்கும் அழைப்பாய் கருதுங்கள் – இன்றிருக்கும் அமைப்புகளை மறுபடியும் சிந்தித்துப் பார்த்து இன்னும் சமமான, மேலும் மற்ற எதிர்காலங்களை உள்ளடக்கிய ஓர் அமைப்பை உருவாக்க முயற்சித்திடுவோம்.
பல சந்ததியினர்களிடையே விளங்கும் ஏழ்மையும் காலனித்துவ வரலாற்றுத் தாக்கங்களை ஆராயும் நோக்கத்துடன் தொடங்கிய இம்முயற்சி, உரையாடல்களுக்கும், புது கூட்டணி முயற்சிகளுக்கும் களஞ்சியத்தைப் பகிர்ந்துருவாக்கவும் அளித்த மேடை ஆயிற்று. இதன் கண்டுபிடிப்புகள் எப்படி வரலாற்றில் சொத்துக்களை அபகரித்தலும் சுரண்டல்கலும் தொடர்ந்து நம் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன என வலியுருத்தும் வேளையில், சமுதாயங்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கைத் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து புது வழிகளில் செயற்பட்டால் ஏற்படக்கூடிய சாத்தியங்களைத் தெளிவாகக் காட்டுகிறது.
எஸ்கேப் உருமியின் (EXCAPE URMI) முயற்சி முடிவல்ல, ஒரு தொடர் செயற்போக்காகும். இந்த ஆய்வின் பங்கேற்பாளர்களின் தயவுடன் உருவாக்கிய களஞ்சியம் – கொள்கை வரைப்படம், இந்த டிஜிட்டல் கண்காட்சி, நடைமுறைக் கருவிகள் மற்றும் வழிகாட்டல் பத்திரங்கள் – திட்ட வெளியீடுகளுக்கு மேற்பட்ட ஒன்றாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்துடனே உருவாக்கப்பட்டன. அவற்றை எடுத்து, தம் பொருத்தத்திற்கு மாற்றி, மற்ற இடங்களில், மற்ற சமுதாயத்தினரிடயே மேலும் விரிவாக்கம் செய்ய அமைத்த படிக்கற்கள் தான் இத்திட்டம்.

