போதனைக்கான கருவிகளும் விவரங்களும்

இந்த ஆராய்ச்சியின் போது, மலேசிய இந்தியப் பெண்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் உள்ள படவிளக்கங்களும் திசையன் சின்னங்களும் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தே இருந்தது என்பதை உணர்ந்தோம். ஆகையால், நாங்கள் கலாச்சாரத்தை முறையாக எடுத்துக்காட்டும் படவிளக்கங்களையும் ஆய்வுக் குழுவின் கதைகள் மற்றும் அனுபவங்களை உன்னதமாகப் பிரதிபலிக்கும் வண்ணம் திசையன்களையும் தயார்படுத்த செல்வத்தை நியமித்தோம்.
அதில் சில திசையன்கள் பதிவிரக்கம் செய்ய இங்கே வழங்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் உங்கள் படைப்பில் அதனைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்த எண்ணினால் செல்வத்தையும் எஸ்கேப் ஊர்மி ஆய்வுத்திட்டத்தையும் தயவு செய்து குறிப்பிடுங்கள். சமூக ஊடகங்களில் @excapeurmi-யைக் குறிப்பிடவும் மறந்திடாதீர்கள்! ”
ஆய்வுக் குழுவின் கதைகளையும் பங்களிப்புகளையும் காட்சிப்படுத்துவதால், இட்டிஜிட்டல் கண்காட்சி மலேசிய இந்தியப் பெண்கள் முக்கிய தகவல் ஊடகங்களில் சந்திக்கும் குறைந்த பிரதிநிதித்துவத்துவமும் ஒருபக்க சாய்வுடன் கொண்ட விளக்கங்களையும் தவிர்க்கலாம்.
இது காலனித்துவம் மற்றும் நிலையற்ற சந்தர்ப்பங்களுடனான வாழ்வை மேல்நிலை மலேசிய ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குப் போதிக்க தயாரித்த வளம் ஆகும். 2 மணி நேரம் வகுப்பில் நடத்துவதற்கான போதனை, இந்தப் பதிவிறக்கம் செய்ய முடிந்த பீடிஎவ் (PDF) வழிகாட்டியில் உள்ளது. விவரங்கள் அனைத்தும் தமிழிலும் ஆங்கலத்திலும் உண்டு. ஆசிரியர்கள் இங்கு வழங்கியுள்ள தகவல்களைத் தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
Download PDF






