ஆய்வுக் குழுவைச் சந்தியுங்கள்

அவர்களின் குரல்களை மையப்படுத்துவதன் மூலம், இந்த ஆய்வுக் குழு ஆராய்ச்சியை வாழ்வியல் நிஜங்களில் வேரூன்றச் செய்தும்,
சமூக முகவாண்மையைப் பலப்படுத்தியும், நடைமுறைக்கு தகுந்த மாற்றத்தை கொண்டு வரும்படியான தீர்வுகளை முன்னிறுத்தினர்.
அவர்களின் பங்களிப்புகள்:
• சமூகத்தின் உண்மையான தேவைகளை பிரதிபலிக்கும் வண்ணம் ஆராய்ச்சியை மேற்கொண்டது.
• நகர்ப்புற ஏழை மலேசிய இந்தியப் பெண்கள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கும் நடைமுறைத் தீர்வுகளை அடையாளம் காண்பது.
• நேரடி அனுபவங்களுடன் சமுதாய இடைவெளிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் பொருத்தமான கொள்கை முயற்சிகளை அடையாளம் காண உதவுவது.
47 மலேசிய இந்தியப் பெண் துணை-ஆய்வாளர்கள்,
கோலாலம்பூர் மற்றும் பினாங்கு பி40 சமூகத்தை சார்ந்தவர்கள்,
தங்கள் வாழ்வானுபவங்களையும் கண்ணோட்டத்தையும் இத்திட்டம் முழுவதும் பகிர்ந்துள்ளனர். அவர்கள் ஆராய்ச்சி கட்டங்களை வடிவமைத்து, ஆய்வின் கேள்விகளை மேம்படுத்த உதவி, சமூக உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வளர்ப்பு முயற்சிகளுக்கு நிலையான தீர்வுகளைக் காண இணைந்து செயல்பட்டனர்.

