How to use this website:

  • Select your preferred language.
  • Scroll down from the homepage to begin.
  • Use the menu tabs at the bottom to move between sections.
  • Click using the middle of the henna hand cursor
  • Follow the ↓ scroll icon to continue exploring each section.

காட்சி அமைத்தல்

தென்னிந்திய வர்த்தகர்கள் ஐரோப்பிய காலனிகளைக் (ஆராசரட்னம், 1970) காட்டிலும் 1500 ஆண்டுகள் முன்னரே இந்த பகுதியில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டுள்ளனர். பல ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானிய காலனித்துவ அரசாங்கங்களும் நம் நிலத்தை ஆக்கிரமித்து அதன் மக்களை 400 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தனர். பிரட்டானிய காலனித்துவ நிர்வான அதிகாரிகலோ ஏழைத் தொழிலாளர்களைப் பல தென்னிந்திய மாநிலங்களிலிருந்து 1842 முதல் 1917 வரை அன்று மலாயாவிற்கு இடம்பெயர்ப்புச் செய்தனர்.
Click on the dots to navigate between timelines.
காலனித்துவ வரலாற்றுக் கதைகள் இறந்தகாலத்தின் பங்கு மட்டுமல்ல, நிகழ்காலத்தை உருவமைக்கும் உண்மைகளும் ஆகும்.
இப்பகுதி வரலாற்றுப் புகைபடங்களையும் பதிவுகளையும் மட்டுமல்லாது நிகழ்கால படங்களையும் ஒலிபதிவுகளையும் கொண்டு காலத்தினால் ஏற்பட்ட மாற்றங்களையும் மாற்றாமின்மையையும் ஒன்றிணைத்துக் காட்டுகின்றது.
வடிவமைப்பின் குறிப்பு: கையின் மையக்கருத்து
இப்பகுதியில் ஒரு கை தான் காட்சியின் மையப்புள்ளியாக மாறுகின்றது. இந்தியக் கைரேகை சோதிடத்தில், ஆயுள் ரேகை நம் வாழ்வில் ஏற்படும் வெவ்வேறு பாகங்களைக் குறிக்கும். இங்கே, ஐந்து புள்ளிகள் ஆயுள் ரேகையின் மீது இடப்பட்டுள்ளது, ஐந்து முக்கிய வரலாற்றுக் காலக்கட்டத்தைக் குறிக்கும், காலனித்துவ அதிகாரக்காலம் முதல் இன்றுள்ள மலேசியா வரை. இச்சாதனம், கலாச்சார சின்னங்களை மலேசிய-இந்திய அனுபவங்களுடன் சேர்த்து வைக்கிறது. இவை இரண்டும் ஒன்றிணைந்து, காலப்போக்கை வாழ்ந்த பாரம்பரியங்களில் நிலைநாட்டுகிறது.

17-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்: இன அடிப்படையிலான தொழிலாளர் படிநிலைகள் மற்றும் அடிமைத்தனம்

கடந்த காலம்: ஐரோப்பிய குடியேற்ற அரசுகள், தங்களுடையக் காலனிகளில் அடிமைத்தனம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியாயப்படுத்துவதற்காக, இன அடிப்படையிலான படிநிலைகளை உருவாக்கினர். அடிமைகளாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களும் ஒப்பந்தப் பணிசெய்ய அழைத்து வரப்பட்ட தென்னாசியாவைச் சார்ந்தவர்களும் சொத்துக்களாக நடத்தப்பட்டனர். அவர்களது சுய உரிமைகளை வழங்க மறுத்ததுமட்டுமல்லாது, தம் பிரட்டானிய அரசின் செழிப்பை மேம்படுத்த தொழிலாளர்களை வன்முறைக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்படுத்தினார்கள்.
இன்றையக் காலம்: அந்தப் படிநிலைகளின் சுவடுகள் இன்றும் வர்க்கம் மற்றும் இன அடிப்படையிலான பாகுபாட்டில் காணப்படுகின்றன. மலேசிய இந்தியப் பெண்கள், குறிப்பாக பி40 சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அமைப்புசார் பாகுபாடு, குறைந்த மேலான்மைக்கான வாய்ப்புகள் மற்றும் தொடர்ந்து அவர்களின் உழைப்பிற்கு அளிக்கும் குறைந்த வெகுமதியும், காலனித்துவத்தால் ஏற்படுத்தப்பட்ட சுயநல அமைப்புகள் காரணமாகும். அவை உருமாறியிருப்பினும் மறைந்துபோகவில்லை என்பதை எடுத்துரைக்கின்றது.
படத்தை வழங்கியது: அன்ஸ்பிலேஷ் (Unsplash) சமூக வரலாற்றுக் காப்பகம்

1842 – 1917: பிரட்டானிய காலனித்துவக் குடியேற்றக் கொள்கைகள்

கடந்த காலம்: பிரட்டானிய காலனித்துவ நிர்வாகிகள், தென் இந்திய மாநிலங்களில் இருந்து வறிய, தொழிலாளர்களை மலாயா தோட்டங்கள், தொடருந்து சாலைகள் மற்றும் நகர்ப்புற சேவைகளில் வேலை செய்ய வரவழைத்தனர். அங்கே அவர்கள் சுதந்திரத்தை இழந்து கடுமையான பணிநிலைகளைக் கடந்து வந்தனர். காலனித்துவக் கொள்கைகள் இன அடிப்படையிலான தொழிலாளர் படிநிலைகளை வலுப்படுத்தியதுடன், இந்திய தொழிலாளர்களின் உழைப்பை மென்மேலும் சுரண்ட, அவர்களைச் சமூகம் மற்றும் பொருளாதார அமைப்பின் கீழ்த்தட்டு நிலைகளிலுக்குத் தள்ளப்பட்டனர்.
இன்றையக் காலம்: பி40 சமூகத்தைச் சார்ந்த மலேசிய இந்தியப் பெண்கள், இன்றும் குறைந்த ஊதியத்திற்குப் பாதுகாப்பற்றப் பணிநிலைகளில், சமூகப் பாதுகாப்பற்றச் சேவைகள் வழங்கும் துறைகளில் அதிகம் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
படம் வழங்கியது: Crown Copyright Reserved. லண்டன், தகவல் மைய அலுவலகம் வெளியிட்டது.

1957 – சுதந்திரக் காலம்

இன்றையக் காலம்: உறுதியானச் செயலாக்கக் கொள்கைகள் (affirmative action) சமத்துவமற்றே உள்ளது. மலேசிய இந்தியர்கள் பெரும்பாலும் இந்த பயன் தரும் கொள்கைகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். நகர்ப்புற வறுமையில் வாழும் மலேசிய இந்தியப் பெண்கள், ஏழ்மையில் வாடுவதுடன், வீடு, கல்வி என பலவாறான அமைப்பு ரீதியான தடைகளைச் சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட ஒதுக்குமுறையினால் எதிர்கொள்கின்றனர்.

1970கள் – 1990கள்: நகர்ப்புற இடம்பெயர்ப்பு மற்றும் குடியிருப்பிடம் மாற்றங்கள்

கடந்த காலம்: தோட்டங்களின் மூடல்களும் பரவலான இயந்திர பயன்பாடுகளும் பல இந்தியக் குடும்பங்களைச் செந்தூல், பிரிக்க்ஃபீல்ட்ஸ், பினாங்கு பகுதிகள் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. அவர்களின் குடியிருப்புப் பகுதிகள் தங்களின் தாழ்ந்த பொருளாதார ரீதியைப் பிரதிபலிக்கும் வண்ணம்,பெரும்பாலன வீடுகள் புற்றீசல் போல் கூட்டமாகவும் முறையான வசதிகளற்றும் பாதுகாப்பின்றியும் அமைக்கப்பட்டன.
இன்றையக் காலம்: நகர்ப்புற வறுமையில் வாழும் மலேசிய இந்தியப் பெண்கள், நகர்மயமாக்கம் (gentrification), உயர்கின்ற வாடகைச் செலவுகள், மற்றும் உறுதியற்ற குடியிருப்பு உரிமைகள் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களில் பலர் குறைந்த வசதிகளுடன் கூடிய மலிவான அடுக்குமாடி வீடுகளில் குடியிருக்கின்றனர். இது தோட்டங்களை விட்டு நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த அவர்களின் பெற்றோர்கள் எதிர்கொண்ட குடியிருப்பு நிலையான்மை பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
படம் வழங்கியது: Annie Spratt, Creative Commons

2015 – இன்றையக் காலம்: இன்றும் தொடர்ச்சியான சமத்துவமின்மைகள்

கடந்த காலம்: மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டணர் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்பட்டக் கல்வி, குடியிருப்பு மற்றும் வருமான இடைவெளி போன்ற பிரச்சனைகளை குறைக்க ஒரு சில முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டண.
இன்றையக் காலம்: ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) 2023 எஸ்டிஜி முதலீட்டாளர் வரைப்படம், பாலின சமத்துவமின்மையை மலேசியா இரண்டாவதாகக் கருத்தில் கொள்ள வேண்டிய சவாலாக அடையாளம் கண்டுள்ளனர். மலேசிய இந்தியர்களில் சுமார் 40% மக்கள் இக்காலக்கட்டத்திலும் குறைந்த வருமான வர்க்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். பி40 சமூகத்தைச் சார்ந்த இந்தியப் பெண்கள் இன்னும் பயன் தரும் கொள்கைகளிலிருந்து ஒதுக்கப்படுவதோடு,பாதுகாப்பற்றத் தொழில் துறைகளுக்குத் தள்ளப்படுகின்றனர். இவை தொடர்ச்சியான அமைப்புகள் சார்ந்த தடைகளைக் குறிக்கின்றது.

சுதந்திரத்திற்குப் பிறகு பூமிபுத்திர (Bumiputera) மக்களின் முன்னேற்றத்தில் அதிகம் நாட்டம் செலுத்தியதால், மலேசிய இந்தியர்ககளின் நிலைமை மேலும் மோசமடைந்தது (ரெட்டி & செல்வநாதன், 2019). மலேசிய இந்திய இலாகாவின் சமூக நலப் பிரிவான சமூக மறுமலர்ச்சி அமைப்பின் (YayasanPemulihan Sosial) தரவுகள்படி, நாட்டில் வாழும் 26 இலட்சம் இந்தியர்களில் சுமார் 40% பேர் வருமானப்பகர்வின் அடித்தட்டில் இன்றும் சிக்கித் தவிக்கின்றனர் (மலாய் மேல், 2015).
பின்னணி புகைப்படம் – Mogan Selvakannu
காலனித்துவ ஆட்சியின் கீழ் கொக்கோப் பயிர்களை அறுவடை செய்தத் தமிழ்த் தொழிலாளர்களிலிருந்து இன்றைய பனைமரத் தோட்டங்களில் பணிபுரியும் குடிபெயர்ந்து வந்த தொழிலாளர்கள் வரை — முகங்கள் மாறினாலும், சுரண்டல் அமைப்புகள் ஒருபோலவே தொடர்கின்றன.
Credit left image: வழங்கியது: தமிழ்த் தொழிலாளர்கள் – Crown Copyright Reserved. லண்டன், தகவல் மைய அலுவலகம் வெளியிட்டது

Credit right image: பனைமரமும் குடிபெயர்ந்த தொழிலாளரும் – ஓவியம் முகமது சுஹாய்மி முகமதிற்குச் சொந்தம்.
62%
இந்தியர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக உணர்கிறார்கள், 28% பேர் மட்டுமே நியாயமாக நடத்தப்படுவதாக உணர்கிறார்கள்
62%
மலேசிய இந்தியச் சிறுவர்கள் 62 விழுகாட்டினர் மட்டுமே தங்களது சமூக-பொருளாதார வர்க்கத்திலிருந்து வளர்ச்சி காண்கின்றனர். மாறாக, சீன சிறுவர்கள் 89 விழுகாட்டினரும் பூமிபுத்திர சிறுவர்கள் 73 விழுகாட்டினரும் வளர்ச்சி காண்கின்றனர்.
227,600
பி40 வர்க்க இந்திய குடும்பத்தினர்களின் மாத வருமானம் RM2,672 மட்டுமே.
40%
26 இலட்சம் இந்தியர்களில் 40% பேர் வருமானப் பகர்வின் அடித்தட்டில் இன்றும் சிக்கித் தவிக்கின்றனர்.