நாங்கள் படக்குரல் முறை மற்றும் கதைக்கூறல் முறையின் வழி பெற்ற தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நிலையற்ற சந்தர்ப்பங்கள் மற்றும் காலனித்துவம் என்றால் என்னவென்று எங்கள் ஆய்வுக் குழு புரிந்துக் கொண்டதென்பதை நாங்கள் அறிகிறோம். ஆய்வுக் குழுவிடமிருந்து இரண்டு சுற்றுக்குக் களப்பணி செய்து சேர்த்தத் தரவுகள், பிரதிபலிப்பு கருப்பொருள் பகுப்பாய்வு (Reflexive Thematic Analysis) முறை கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது (பிரௌன் et al., 2023).
நாங்கள் அவர்களிடமிருந்து அறிந்துகொண்ட கருத்துக்களைப் பற்றி மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக் குமிழிகளை அழுத்துங்கள்.
நிலையற்ற சந்தர்ப்பங்களும் காலனித்துவமும்

காலனித்துவம் என்றால் என்ன?
காலனித்துவம் காலனி ஆட்சியின் விளைவுகளை, நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்ந்து நீடித்துத் தருவதே ஆகும்.
அது மக்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர், யாரின் அறிவாற்றல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, யாருக்கு வேலை வாய்ப்புகள், குடியிருப்பு அனுமதி, சுகாதாரம் மற்றும் கல்வி பெற சலூகைகள் செய்து வழங்கப்படுகின்றன என்பதை நிர்ணயிக்கும்.
இத்திட்டத்தில், ஏன் நகர்ப்புற ஏழை மலேசிய இந்தியப் பெண்மணிகள் இன்றும் இன பாகுபாடு கொண்ட கொள்கைள், வெவ்வேறு சமூக வர்க்கங்கள் மற்றும் சமூக இழிவு போன்ற அமைப்பு சார் தடைகளைக் காலனித்துவம் தெளிவாக விளக்குகிறது.
காலனித்துவம் கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல, கடந்த காலம் நிகழ் காலத்தை எப்படி வடிவமைக்கின்றது என்பதில் தான் இருக்கிறது.
நிலையற்ற சந்தர்ப்பங்கள் என்றால் என்ன?
பல நகர்ப்புற ஏழை மலேசிய இந்தியப் பெண்மணிகளுக்கு இந்த ஆய்வுத்திட்டத்தில், நிலையற்ற சந்தர்ப்பங்கள் ஏழ்மையைப் பற்றியது மட்டுமல்ல, கடின உழைப்பையும், குறைத்து மதிப்பிடப்படுவது மற்றும் விரிசல்களின் நடுவே விழுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
நிலையற்ற சந்தர்ப்பங்கள் தொடர்ச்சியான ஏற்றத் தாழ்வுடன் வாழும் நிலையை எடுத்துக் காட்டுகின்றது. நிலையற்ற பணி, சம்பளம், சமூக ஆதரவு மற்றும் உறுதியற்ற குடியிருப்பு இதற்குக் காரணமாகலாம்.
ஆனால், நிலையற்ற சந்தர்ப்பங்கள் அவதிப்படுவதற்கும் நம்பிக்கை இழந்து வாழ்வதற்கான இடம் மட்டும் அல்ல.
நிலையற்ற சந்தர்ப்பங்களுடன் ஈடுபடும் போது, நாம் மலேசிய இந்தியப் பெண்கள் எவ்வாறு சுய வலிமையையும் படைப்பாற்றலையும் வெளிக்காட்டுகிறார்கள் என்பதனை அறியலாம். நிலையற்ற சூழ்நிலைகள் ஒருவருக்கொருவர் இடையே உள்ள தொடர்பை வலுபடுத்துவது மட்டுமின்றி சமூகத்தை வடிவமைக்கவும் உதவுகிறது.

