How to use this website:

  • Select your preferred language.
  • Scroll down from the homepage to begin.
  • Use the menu tabs at the bottom to move between sections.
  • Click using the middle of the henna hand cursor
  • Follow the ↓ scroll icon to continue exploring each section.

ஆய்வுத்திட்டத்தைப் பற்றி

பட்டணத்து ஏழ்மையில் பாதிக்கப்பட்ட வில்லுமை படைத்த மலேசிய இந்திய பெண்மணிகளுக்கிடையே, குடியேற்ற ஆதிக்கம் மற்றும் நிலையற்ற தன்மையினால் ஏற்படும் ஈடுபாடுகளின் ஆய்வு (EXCAPE URMI), ஒரு சர்வதேச, பலத்துறைச் சார்ந்த ஆய்வுத்திட்டம் ஆகும். இத்திட்டம் வரலாற்று உருவாக்கம் பெற்ற ஒப்பந்தக்கூலிகளின் ஏழ்மை, மலேசியாவில் இன்றும் எவ்வாறு நீடிக்கின்றது என்பதை ஆராய்ச்சி செய்கிறது.
பிரித்தானிய சர்வதேச பல்துறை கழக மானியத்தின் நிதியுதவியுடன் இவ்வாய்வு, 74 நபர்களைப் பல பரிமானங்களில் கொண்டு வெற்றியடைய செய்துள்ளது. இந்த ஆய்வு, பட்டணத்து ஏழ்மையில் பாதிக்கப்பட்ட மலேசிய இந்தியப் பெண்மணிகள் எவ்வாறு சமூக மீள்திறனை வளர்க்கின்றனர் என்பதையும் அவர்களின் தினசரி வாழ்வில் உள்ள காலனித்துவத்தின் வரலாற்றுக் கதைகளைக் கேட்டறியவும் இதைக் கொண்டு அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவுமே குறிக்கோள்களாக கொண்டிருக்கின்றது.
இந்த டிஜிட்டல் கண்காட்சி, நிழரோரத்தில்: காலனித்துவம் மற்றும் நிலையற்ற சந்தர்ப்பங்களுடனான வாழ்வு, கலை சார்ந்த செயல்முறைகள், புகைப்படம் வழி அனுபவத்தை விவரிப்பது மற்றும் கதை கூறல் போன்ற முயற்சிகளின் மூலம், காலனித்துவத்தின் வரலாற்றுக் கதைகள் எவ்வாறு இன்றும் நம் பணி, குடியிருப்பு, பாலின பாத்திரங்கள், மகிழ்ச்சி மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற்து என்பதை அறியலாம்.

பலத்துவ ஆராய்ச்சுத்திட்டம் என்றால் என்ன?

பலத்துவ ஆராய்ச்சுத்திட்டம் சிக்கலான பிரச்சனைகளை எதிர்கொள்ள, பல கல்வி சார்ந்த துறைகளிலிருந்தும் கல்வி சாரா இயக்கங்களிலிருந்தும் (உதாரணமாக சக சமூக உறுப்பினர்கள், செயல்முறை வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள்) ஒன்றிணைத்து செயல்படுவதே ஆகும்.

பல துறைகளின் வெவ்வேறான நிலைபாடுகளை மட்டும் கருத்தில் கொண்டிடாமல், பலத்துவ ஆராய்ச்சி, புது கருத்துகள், வழிமுறைகள் மற்றும் தீர்வுகளை ஒன்றிணைந்து கண்டறியும், துறைகளின் வரையறையைத் தாண்டிய ஒரு முயற்சியாகும்.
இவ்வாறான பலத்துவ ஆராய்ச்சி திட்டங்கள், காலனித்துவம், நிலையற்ற சந்தர்ப்பசூழ்நிலைகள் போன்ற முக்கியப் பிரச்சனைகளை வரலாறு, சமூக அறிவியல், பாலினக் கல்வி, பொருளாதாரம், நகரியல் ஆய்வு மற்றும் சமூக வாழ்வனுபவ அறிவு ஆகிய வெவ்வேறு கோணங்களை அடக்கிய முழுமையான அணுகுமுறையைக் கொண்ட ஆய்வாகும். ஏட்டில் மட்டுமல்ல நடைமுறையிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இவ்வாய்வின் தலைமை நோக்கம்.

எஸ்கேப் ஊர்மி (EXCAPE URMI) இதனையே அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றது. இந்த ஆய்வின் முதன்மை செயற்குழு, அரசாங்க அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் முக்கிய பங்குதாரர்கள் உறவை மேம்படுத்தி வருகிறது. அவை, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, MyFamily, MySkill மற்றும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (NUPW) ஆகிய அமைப்புகள் ஆகும்.
இக்கூட்டணியிண் ஆதரவுடன் திரட்டிய விவரங்களும் கண்டுபிடிப்புகளும் மலேசிய இந்தியப் பெண்களின் நிலையற்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவர்களின் நகர் ஏழ்மையின் பிரச்சனைகளைச் சம்மந்தப்படுத்திய பொது கொள்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.

இந்த ஆய்வின் முக்கிய பங்காதாளரான நகர் ஏழ்மையால் பாதிக்கப்பட்ட மலேசிய இந்தியப் பெண்களின் அவசியங்களை பூர்த்தி செய்யும் எண்ணத்திலே மேற்கொள்ளப்படுகிறது. அவர்களின் திறமைகளை வளர்க்கும் பட்டறைகள், தத்தம் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் வண்ணத்தில் இந்த ஆய்வின் குழு வழங்குகிறது.
இந்த ஆய்வுத்திட்டம் காலனித்துவத்தை அகற்றும் விமர்சன பங்கேற்ப்பு செயல் ஆய்வு (DCPAR) முறையை பயன்படுத்திப் 16 மாதங்களாகக் கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் வசிக்கும் 47 மலேசிய இந்திய பெண்களைக் கொண்ட ஆய்வுக் குழுவைத் தயாரித்து, ஆதரித்து மற்றும் அவர்களுடன் சேர்ந்து பணியும் செய்தனர்.
காலனித்துவத்தை அகற்றும் விமர்சன பங்கேற்ப்பு செயல் ஆய்வு (DCPAR) என்றால் என்ன?
டீசீபீஏஆர் (DCPAR) என்பது “ஆய்வாளர்களுக்கும்” “பங்கேற்பாளர்களுக்கும்” இடையே உள்ள பார்ம்பரிய படிநிலைகளைப் பரிசோதித்துப் பார்க்கும்படி வலியுறுத்தும் ஆராய்ச்சி அணுகுமுறையாகும். சமுதாய நபர்களை ஆய்வின் பங்கேற்பாளர்களாக மட்டும் கருதிடாமல், டீசீபீஏஆர் அவர்களை ஆய்வின் முழுப்பங்கிலும் துணை ஆய்வாளர்களாகக் கருதிடுகின்றது – ஆய்விற்கான கேள்விகளை உருவாக்கும் முதல், தரவுகளைச் சேர்த்து பகுப்பாய்வு செய்து, ஆய்வின் கண்டுப்பிடிப்புகளை வெளியிடும் வரை.
அதன் மையத்தில், டீசீபீஏஆர்(DCPAR) முக்கியம் அளிக்கும் குறிக்கோல்கள்:
கூட்டுப்பணி: ஆய்வு சமுதாயத்துடன் சேர்ந்து நடத்துதல், சமுதாயத்தின் மீதல்ல.
சமத்துவம்: கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாரா அறிவாற்றல்கள் இரண்டிற்கும் ஒரே அளவிலான மதிப்பு வழங்கப்பட வேண்டும்.
நடவடிக்கை: ஆய்வின் நோக்கம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, அதைக் கொண்டு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான்.
காலனித்துவ தாக்கங்களை நீக்குதல்: விமர்சன பங்கேற்ப்பு செயல் ஆய்வு (பீஏஆர்) பழங்குடி அல்லது பாரம்பரிய அறிவிற்கும் சமுதாய வல்லுமைக்கும் மதிப்புத் தர மறுக்கும் காலனித்துவ படிநிலைகளை நிராகரித்துவிட்டு, வாழ்வனுபவங்களுக்கும் தத்துவத்திற்கு அளிக்கும் அதே உரிமையை வழங்கும்.
எதிர்காலத்தை உருவாக்குதல்: ஒதுக்கப்பட்ட சமுதாயங்கள் சுதந்திரமாகச் சிந்திக்க நேரமும் இடமும் வழங்கினால், பீஏஆர்-இன் வழி, நிலையற்ற சந்தர்ப்பங்களினால் தடைப்படும் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனையை உயிர்ப்பிக்க இயலும்.
ஆற்றல்-வளர்த்தல்: திறன்களையும், தன்னம்பிக்கையையும் மற்றும் வளங்களையும் ஆய்வுத்திட்டம் முடிவடைந்த பின்னரும் சமுதாயத்தில் நீடித்திருக்க வழி வகுத்தல்.
ஒதுக்கப்பட்ட குரல்களுக்கும் அறிவுத்திறனுக்கும் வலிமை அளித்து மையப்படுத்துதல்.
காலனித்துவத்தைக் குலையச் செய்யும் வேளையில் நவீனத்துவத்தைப் பாரம்பரிய நடைமுறைகளைக் கொண்டு சமநிலையை அடைய முயற்சித்தல்.
நிலையற்ற சந்தர்ப்பங்கள் பல சந்ததியினரைப் பாதித்ததோடு, அமைப்பு ரீதியான தடைகளையும் மேலும் வலுபடுத்தியது.

இப்பெயரின் பொருள் என்ன?

எஸ்கேப்-ஊர்மி என்னும் சுருக்கப் பெயர், இந்த ஆய்வுத்திட்டத்தின் வழி ஏற்படுத்த விரும்பும் மாற்றத்தக்க நடவடிக்கையைப் பிரதிபலிக்கின்றது. ஊர்மி இந்தியப் பெண்களுக்கு பொதுவாக வழங்கப்படும் ஒரு பெயராகும். உருமி என்பது தமிழ் நாட்டுப்புற இசையில் முக்கிய பங்கு வகிக்கும் மோதுகைக்கருவி ஆகும்.
காலாண்டு 1: தயாரிப்பு
ஆட்சேர்ப்பு, முறையான நெறிமுறைகளுக்கு ஒப்புதல் பெற்றல், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகத்தினருடன் கூட்டுறவுகளை உருவாக்குதல் மற்றும் மலேசிய ஆய்வுக் குழுவின் ஆய்வுத் திறனை வலுப்புடுத்துதலில் கவனம் செலுத்துதல்.
காலாண்டு 2: ஆராய்ச்சி
கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் பட்டறை வடிவத்தில் கூட்டுக்களுடன் களப்பணி செய்து, நிலையற்ற சந்தர்ப்பங்கள் எனும் தலைப்பிற்கு கருத்துருவாக்கம் அக்கூட்டுக்களுடன் செய்தோம்.
காலாண்டு 3: பகுப்பாய்வு
பயிற்சி பொருட்களும் துறையியல் தரவுகளையும் தொகுத்து முக்கியப் போக்குகளை அடையாளம் கண்டோம். தொடக்கக கண்டுபிடிப்புகள் மாநாட்டில் பகிரப்பட்டண.
காலாண்டு 4: பரவல்
ஒரு தொடக்க ஆய்வுத்தாள் உருவாக்கி, இலக்கியத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதற்கான கருத்துரைப்புகளையும் பெற்றோம். அடுத்தக் கட்டத்திற்கு ஓர் ஆக்கபூர்வமான குழுவை ஆட்சேர்த்தோம்.
காலாண்டு 5: உருவாக்கம்
ஆய்வுக் குழுக்களுக்காக பயிற்சிப் பட்டறைகளைத் தயார் செய்து, அதனைப் பரப்புவதற்கான திட்டத்தையும் உருவாக்கினோம். அதனோடு இடர் மேலாண்மைப் பணியை மேற்கொண்டு, முதன்மை படைப்புக் குழுவை அடையாளம் கண்டோம்.
காலாண்டு 6: தொடர்பாடல்
ஆய்வுக் குழுக்கள் காலனித்துவ மற்றும் நெறிமுறை பட்டறைகளில் கலந்து, கதைகூறதலையும் வாய்வழி வரலாற்றையும் ஆராய்ந்தனர். தொடர்புக் கொள்ளும் உத்திகளை டிஜிட்டல் கண்காட்சி வரையறக்குள் இணைந்து வடிவமைத்தோம்.
காலாண்டு 7: கொண்டாட்டம்
ஆய்வுக் குழுக்களின் கருத்துக்களைக் கொண்டு பரிசீலனைச் செய்யப்பட்டன. கோலாலம்பூரில் டிசம்பர் 6 2025 அன்று டிஜிட்டல் கண்காட்சியும் நடைப்பெற்றது.
காலாண்டு 8: மதிப்பீடு
பயிற்சிப் பொருட்கள் மற்றும் தரவுகளை விமர்சன மதிப்பீடு செய்து; மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் காணொளி தயாரிப்பின் வழி ஆய்வுக் கண்டுப்பிடிப்புகளைப் பகிர்வது; மற்றும் தரவுகளை வலைத்தளம் மற்றும் கண்காட்சியின் வழி வழங்கியதைப் பற்றிய ஆய்வுக் குழுக்களின் விமர்சனங்களையும் பின்னூட்டல்களையும் பெறுதல்
Klik bulatan grafik biru untuk membaca bagi setiap suku tahun.