களத்தில் வேலை செய்தல்
நாங்கள் காலனித்துவத்திற்கு முரணான பங்கேற்பு நடவடிக்கை (decolonial participatory action) கட்டமைப்பை பயன்படுத்தி, இச்சமூகம் காலனித்துவம் மற்றும் நிலையற்ற சந்தர்ப்பங்களை எவ்வாறு புரிந்து கொண்டு அதனை அணுகுகின்றனர் என்பதை அறிந்து கொண்டோம்.
இதிலுள்ள அணுகுமுறைகளைத் தங்களது சுய ஆராய்ச்சித் திட்டங்களில் பயன்படுத்த விரும்பினால், எஸ்கேப் உருமி (EXCAPE URMI) ஆராய்ச்சி கையேட்டு பிரதியைப் பெற தயவு செய்து முதன்மை ஆய்வாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆய்வில் எங்களுடன் பகிர்ந்து கொண்ட விவரங்களைப் பற்றிய கருத்துகளை அறிய கீழே தொடர்ந்து வாசியுங்கள்.
நிலையற்ற சந்தர்ப்பங்களிலான பல்லாங்குழி,, நிலையற்ற சூழ்நிலைகளை உள்ளூர் கலாச்சார அனுபவங்களைக் கொண்டு ஆய்வுக் குழு கண்டுபிடித்த ஒரு விளையாட்டாகும். ஆய்வில் கலந்து கொண்ட குழு நபர்கள் சற்று மாற்றியமைக்கப்பட்ட பாரம்பரிய பல்லாங்குழி விளையாட்டை விளையாடினர். இதில் பணம், திறன், நேரம் மற்றும் தொடர்புகள் போன்ற வளங்கள் கோலிகளாகவும், துளைகள் தடைகளையும் வாய்ப்புக்களையும் பிரதிபலித்தது. இது அக்குழு நபர்களை நிலையற்ற சந்தர்ப்பங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வில் கொண்ட மாற்றங்களைத் தழுவும் இயல்பயும் சிந்தித்துப் பார்க்க தூண்டியது.
படக்குரல் ஒரு அணுகுமுறையாகவும் ஊடகமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆய்வுக் குழு புகைப்படங்களை எடுத்து, அப்படங்களுடன் அவர்கள் எவ்வாறு ஒரு தலைப்பை ஒட்டி பேசுகிறார்கள் என்பதைப் பதிவு செய்தார்கள். பெண்கள் தங்களது கதைகளைத் சுய படங்களுடன் சொந்த சொற்களைப் பயன்படுத்தி சொல்ல இவ்வழி அனுமதிக்கின்றது. அதிக ஈடுபாடு கொண்ட இந்த அணுகுமுறை ஆய்வாளர்களிடமிருந்து கவனத்தைத் திருப்பி வாழ்ந்த அனுபவங்களில் அக்கவனத்தை முன்வைக்கிறது. பொது மக்களின் பார்வையிலிருந்து மறைந்திருக்கும் அன்றாட கஷ்டங்களைக் கூட வெளிச்சம் போட்டுக் காட்டும்.
கதைக்கூறல் வழி எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தவும் முன்னோர்கள் வாழ்ந்த நிஜங்களைச் சிந்தித்துப் பார்க்கவும், அனைத்து ஈடுபாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட வழிமுறையாகும். இதில், ஆய்வுக் குழுவினரிடையே கதைக்கூறல் முறை, காலனித்துவம் அவர்களின் குடும்ப வரலாறு, முன்னோர்கள் அளித்த வலிமை மற்றும் ஞானத்தின் மீது கொண்ட தாக்கலை முறியடிக்க முடியும்.
தேநீர் அருந்துதல், கேமரன் தேநீர் தோட்டத்தில் பணிப்புரிய ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்ட இந்தியர் மற்றும் இலங்கையினரின் வரலாறே காரணமாகும். அவர்கள் மோசமான வசிக்கும் சூழல்களில் வாழ்ந்து இன்றுள்ள மலேசிய தேநீர் தொழில் துறைக்கு அடித்தளமாக விளங்கியிருக்கின்றனர். வெவ்வேறு தேநீரை நுகர்ந்து, சுவைப் பார்த்து ஆய்வுக் குழுவினர் இந்த அன்றாட பொருளின் வரலாற்றுப் பெருமையுடன் தாம் கொண்ட தொடர்புகளைப் பற்றி பேசினர்.
ஆகஸ்த்தோ போவலின் ஒடுக்கப்பட்டோரின் நாடகத்தைப் போலவே, ஆய்வுக் குழு குறுகிய நாடகங்களை அரங்கேற்றியது. அந்நாடகம் பல்வேறு பாலின சமத்துவமின்மைப் பிரச்சனைகளை அம்மாக்களாக, மனைவிகளாக, மகள்களாக தொழிளாளர்களாக அவர்கள் அனுபவித்த நிகழ்வுகளை எதிரொலித்தது. இந்நடவடிக்கை ஆய்வுக் குழுவினரின் வாழிந்த நிஜங்களைப் பகுப்பாய்வு செய்து பாலின சமத்துவமின்மையைக் கருத்தாக்கமா உதவியது.
ஜவுளி மதிப்பாய்வு நடவடிக்கை பிரிட்டிஷ்ஜவுளி மதிப்பாய்வு நடவடிக்கை பிரிட்டிஷ், இந்தியாவின் பருத்தி வியாபாரத்தை ஆட்கொண்ட போது, காலனித்துவச் சுரண்டல்களினால் பாதிக்கப்பட்ட மலாயாத் தொழிலாளர்களின் இந்திய ஜவுளி பாரம்பரியங்கள், மாற்றங்களைத் தழுவி முன்னேறிய வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டது. சாரிகள், மெழுகெழுது, கலம்காரி என வெவ்வேறு துணிகளைத் தொட்டுப் பரிசோதித்து, ஆய்வுக் குழு காலனித்துவ வரலாற்றைப் பற்றியும் அன்றாட சாமான்களின் மீது அது கொண்ட தாக்கல்களைப் பற்றியும் யோசித்துப் பார்க்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.
கைவினைக் கலை ஆய்வுக் குழு நிலையற்ற சந்தர்ப்பங்கள் சம்மந்தமான நினைவுகளையும் கதைகளையும் நினைவுக் கோர பயன்படுத்திய ஒரு படைப்பாக்க முறையாகும். படங்களை வெட்டி, அடுக்கி, ஒழுங்குப்ப்டுத்தி, பங்கேற்பாளர்கள் வார்த்தைகளால் சொல்ல இயலாத அனுபவங்களுக்குக் கூட உருவம் கொடுத்தனர். இந்த அணுகுமுறை சிதறிக் கிடக்கும் பி40 மலேசிய இந்திய பெண்மணிகளின் நிஜங்களை ஒருபடமாக்கியது: அவர்கள் ஏற்கும் பல பரிமானங்களும், இருக்கும் சிறு நம்பிக்கயையும் இருக்கிப் பிடித்துக் கொண்டு வளங்கள் பற்றாக்குறையிலும் தன் பொருளுக்குப் (self meaning) புது அர்த்தம் அளித்தல்.
அடையாள வரைப்பட நடவடிக்கை தன் நிலையைப் பற்றி விமர்சன சிந்தனை செய்வதற்கானதாகும். ஆய்வின் பங்கேற்பாளர்கள் தன் சொந்த, சமூக அடையாளங்களை வெவ்வேறு கோணங்களில் இருந்து வரைந்து அதனை அகநிலை மற்றும் சுய அடையாள நிலையிலும் சிந்தித்துப் பார்க்க தூண்டியது.
ஆய்வு ஆத்திச்சூடி என்பது தமிழ்ப் பெண்பாற் புலவர், அவ்வை மூதாட்டி இயற்றிய ஓரடி வாக்கியங்களைப் போலவே, ஆய்வின் குடியேற்ற விலக்க நெறிமுறைகளை வெளிப்படுத்தும் தொடர் ஓரடி கூற்றுகளைக் குறிக்கும். விமர்சன பங்கேற்புச் செயல் ஆய்விற்குத் (Critical Participatory Action Research) தகவல் அடிப்படையிலான ஒப்புதலும் அறவியல் ஆய்வின் வழிகாட்டலின் புரிதலும் மிக அவசியம். ஏனெனில், ஆய்வுக் குழுவினர் அறிவு உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருக்கும் பாரம்பரிய அறிவாற்றலின் பயன்பாடு அறவியல் கூறுகளை ஆய்வுக் குழுவிற்கு எடுத்துச் சென்று சேர்ப்பதை இன்னும் சுலபமாக்கியது. இந்த இரு-சொல் கூற்றுகளின் துணையுடன், ஆய்வின் அறவியல் கூறுகளை ஒவ்வொரு பட்டறைகளுக்கிடையும் நீண்ட இடைவேளை இருப்பினும் ஆய்வுக் குழுவிற்கு நினைவுக் கோருவதை எளிதாக்கியது.

